தலைமைத்துவ செயலமர்வு
தன்வீர் அகடமியின் புதிய மாணவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவப் பயிற்சிநெறி கடந்த ஜூன் 08ஆம் திகதி தன்வீர் அகடமி வளாகத்தில் அஷ்ஷெய்ய் ரிழ்வான்(இஸ்லாஹி) தலைமையில் நடைபெற்றது.
“வாழ்வில் வெற்றி பெறுவதற்கான எட்டுப் பண்புகள்” எனும் தலைப்பில் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் முதலாம் வருட கலை மற்றும் வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கான மூன்று நாள் விஷேட தலைமைத்துவப் பயிற்சிநெறி இஸ்லாஹிய்யா வளாகத்தில் கடந்த ஜூன் 11-13 நடைபெற்றது. அறிவு, ஆன்மா, திறன்விருத்தி ஆகிய மூன்று பகுதிகளையும் மையப்படுத்தி இடம்பெற்ற இந்நிகழ்வில் 74 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.