பரிசளிப்பு வைபவம்

க.பொ.த. சாதாரன தரம், உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு மாதம்பை ஜம்இய்யாக் கிளை பரிசில்களை வழங்கி கௌரவித்தது.

கடந்த மே25ஆம் திகதி மாதம்பை அல்மிஸ்பாஹ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர், பழைய மாணவர்கள் மற்றும் ஜம்இய்யா ஊழியர்கள் உட்பட பலரும் கலந்த கொண்டனர்.

Read More

ருகூன் ஒன்றகூடல்

கடந்த மே22,23ஆம் திகதிகளில் உயன்வத்தை பீஸ் வரவேற்கு மண்டபத்தில் ஜம்இய்யாவின் ருகூன்களுக்கான ஒன்றுகூடல் மத்திய பிராந்திய நாஸிம் சகோதரர் முனீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் நிஹால்(அஸ்ஹரி), அஷ்ஷெய்க் யாஸீன்(கபரி), அஷ்ஷெய்க் ஸெய்னுல் ஹ_ஸைன்(நளீமி) ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர். ருகூன்களின் அறிவு, பொறுப்புணர்வு சகோதரத்துவம், இகாமதுத்தீனுக்கான பங்களிப்பு தொடர்பிலும் விஷேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

Read More

அஸாபீர் இஜ்திமா


இறைபாதையில் சிறார்களின் சங்கமம் என்ற தலைக்கில் அஸாபீர் மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று கடந்த 22ஆம் திகதி புத்தளம் ஜமாஅத்தே இஸ்லாமி பயிற்சி மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 300 மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.

Read More

தர்பிய்யா பயிற்சிநெறி

கடந்த மே17,18ஆம் திகதிகளில் தாருல் ஹஸனாத் புதிய மாணவர்களுக்கான இருநாள் தர்பிய்யா பயிற்சிநெறி தாருல் ஹஸனாத் வளாகத்தில் அஷ்ஷெய்க் ரூமி ஹஸன் (இஸ்லாஹி) தலைமையில் நடைபெற்றது.

Read More

ஊழியர் வழிகாட்டல் நிகழ்ச்சி

பேராதனை, மொரடுவ, தென்கிழக்கு, ஊவா வெல்லச, ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஊழியர் வழியகாட்டல் நிகழ்ச்சிகள் அண்மையில் அந்தந்த பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் அவற்றை அண்டிய பிரதேசங்களில்நடைபெற்றன.

Read More

ஜம்இய்யா பயிற்சி மன்றங்கள் அங்குரார்ப்பணம்

கடந்த மே16 ஆம் திகதி கின்தோட்டை ஜம்இய்யாத்துத் தலபா பயிற்சி மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கின்தோட்டை ஸாஹிரா தேசியப்பாடசாலையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மேற்குப்பிராந்திய நாஸிம் சகோதரர் றிம்ஸாம் உட்பட உயர்தர மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அதேவேளை அண்மையில் பிபில, பகினிகஹவெல ஜம்இய்யா பயிற்சி மன்றமும் பதுளை ஜம்இய்யா பயிற்சி மன்றமும் உத்தியோகபர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More