Tuesday, May 18, 2010

ஜம்இய்யா பயிற்சி மன்றங்கள் அங்குரார்ப்பணம்

கடந்த மே16 ஆம் திகதி கின்தோட்டை ஜம்இய்யாத்துத் தலபா பயிற்சி மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கின்தோட்டை ஸாஹிரா தேசியப்பாடசாலையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மேற்குப்பிராந்திய நாஸிம் சகோதரர் றிம்ஸாம் உட்பட உயர்தர மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அதேவேளை அண்மையில் பிபில, பகினிகஹவெல ஜம்இய்யா பயிற்சி மன்றமும் பதுளை ஜம்இய்யா பயிற்சி மன்றமும் உத்தியோகபர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.