
கொழும்பு உபபிராந்தியம் பாடசாலை மாணவர்களை விசேடமாக கருத்திற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்கின்றது. அதன் தொடரில் கடந்த ஏப்ரல் 13,14 ஆம் திகதிகளில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
இதில் 25 மாணவர்கள் கலந்துகொண்டதுடன், பெரும்பாலானவர்களுக்கு ஜம்இய்யாவின் மிகச்சிறந்ததொரு அறிமுகம் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இயற்கை எழில்மிகு மாத்தளை நகரில் ரத்தோட்டையில் இந்த முகாம் இடம்பெற்றதுடன் அஷ்ஷெய்க் இர்பான் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க் ஷஹீர் (நளீமி), அஷ்ஷெய்க் சுபியான் (நளீமி) அகியோர் வளவளாரலர்களாக பங்குகொண்டு இந்த முகாமின் வெற்றிக்கு வழிககுத்தனர். இவ் 25 மாணவர்களிடத்திலும் ஜம்இய்யா ஆழமானதொரு தாக்கத்தை இந்த முகாம் ஏற்படுத்தியது இதன் வெற்றிக்குரிய அடையாளமாகும்.
Read More