சர்வதேச ஒன்றுகூடல்
OMSED அமைப்பின் ஏற்பாட்டில் தெற்காசிய இஸ்லாமிய மாணவர் அமைப்புகளுக்கான விஷேட ஒன்றுகூடல் கடந்த ஜூன் 21,22ஆம் திகதிகளில் கணடி Tree of life ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை, இந்தியா, பர்மா, பாகிஸ்தான், நேபாளம், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவ அமைப்புக்களின் பிரதிநிதினகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், விஷேட அதிதியாக இஸ்லாமிய அறிஞர் முஸ்தபா முஹம்மத் தஹ்ஹான் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்த கொண்ட மாணவர் அமைப்புக்களின் கடந்த வருட அறிக்கைகள், எதிர்காலத் திட்டங்கள் என்பன ஆராயப்பட்டதுடன. ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கதின் சார்பான ஜம்இய்யதுத் தலபாவின் மத்திய சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ஸிஹான்(நளீமி) நிகழ்வில் கலந்த கொண்டார்.