ஜம்இய்யாவின் குர்துகா எஃப்.எம்
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் “அல்குர்ஆனின் அறிவியல் அற்புதமும் உலக நாகரிகத்துக்கு முஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பும்” எனும் கருப்பொருளில் மாபெரும் இஸ்லாமியக் கண்காட்சியொன்று கடந்த ஜூன்12-16 வரை ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெற்றது. இத்தினங்களில் பேரவளை ஜம்இய்யத்துத் தலபா குர்துபா எஃப்.எம். என்ற வானொலி அலைவரிசையை சீனன் கோட்டையிலிருந்த அஞ்சல் செய்தது.
மர்ஹ_ம் நளீம் ஹாஜியாரின் வாழ்வும் பணியும், முஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு, இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கான நளீடிய்யாவின் பங்களிப்பு, சர்வதேச முஸ்லிம் உம்மத், பெண்கள் பகுதி, சிறுவர் பகுதி, இஸ்லாமிய பாடல்கள் என பல்சுவை அம்சங்களுடன் பேருவளையில் 5 நாட்களாக தொடராக ஒலித்தது குர்துபா எப்.எம்.
குர்துபா கலையகத்திலிருந்து சுமார் 15 கி.மீற்றருக்கு உட்பட பகுதிகளைச் சேர்ந்த நேயர்கள் இவ் அலைவரிசையின் மூலம் பயனடைந்ததை குறிப்பிடத்தக்கது.